போதையின் தாக்கம்: யாழ் பல்கலைக்கழக மாணவன் இயக்கிய விழிப்புணர்வுக் குறும்படம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சிறப்பு கற்கை மாணவன் லம்போ கண்ணதாசன் என்பவர், போதைப் பொருளின் தாக்கம் குறித்த விழிப்புணர்வுக் குறும்படமொன்றை இயக்கியுள்ளார்.
அந்த குறும்படத்தின் முதல் பார்வையை ஈழத்தின் முன்னணி எழுத்தாளர் தீபச்செல்வன் தனது சமூக வலைத்தளத்தில் நேற்று (29) வெளியிட்டுள்ளார்.
கிளிநொச்சியை சேர்ந்த லம்போ கண்ணதாசன் எழுதி இயக்கியுள்ள A For எனப் பெயரிடப்பட்ட இக் குறும்படம் தற்போது எமது தேசத்தில் ஏற்பட்டுள்ள போதைப் பொருளின் அசூரத் தாக்கத்தை எடுத்தியம்பும் வகையில் அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கதாபாத்திரங்கள்
ஒளிப்பதிவில் தனுவும், படத்தொகுப்பில் கவிலன் கண்ணதாசனும், உதவி இயக்குனராக எஸ்.வி. சாரும் பணியாற்றியுள்ளனர்.
மேலும், குரல் வெளிப்பாட்டுக் கலைஞர்களாக வீ.கே கரிகாலனும் கவிரத்தினமும் பணியாற்றியுள்ளனர், இப் படத்தில் பிரசாத், அபிசன், இராசதுரை மற்றும் சஞ்சய் ஆகியோர் நடித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |