வைத்தியசாலை ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் காயம்
Polonnaruwa
Hospitals in Sri Lanka
By Dharu
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையின் சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குறித்த விபத்தில் காயமடைந்த சிறுநீரக வைத்தியசாலை ஊழியர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலை கட்டிடத்திற்கு பலத்த சேதம்
இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக வைத்தியசாலை கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |