23 இந்திய இராணுவ வீரர்கள் மாயம் : தேடுதல் தீவிரம்
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் 23 இந்திய இராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாக இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன
மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த வீரர்கள் வெள்ளத்தில்அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரில் மூழ்கிய இராணுவ வாகனங்கள்
மேலும் பல இந்திய இராணுவ தளங்கள் மற்றும் பல இராணுவ வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதன் காரணமாக படையினர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இராணுவ வீரர்களைத் தேடும் பணி
இது குறித்து குவாஹாட்டி இராணுவ மையத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், தீஸ்டா ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இராணுவ வீரர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
flash flood at Muguthang in North Sikkim resulted in complete damage of two permanent bridges at Dikchu and Toong . Locals being rescued by BRO Karamyogis and rescue ops is under progress to save lives.@SpokespersonMoD @adgpi @BROindia pic.twitter.com/AfovOyq5gr
— PRO, GUWAHATI, MINISTRY OF DEFENCE, GOVT OF INDIA (@prodefgau) October 4, 2023
இதேவேளை வெள்ளப்பெருக்கில் சிக்கி ஐந்து பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.