வெளிநாடொன்றில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்: வெளியான புதிய தகவல்
புதிய இணைப்பு
குவைத் நாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கலைஞர்கள் உள்ளிட்ட 26 பேரில் 24 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சு இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
குவைத்(kuwait) அதிகாரிகள் 24 இலங்கையர்களை கைது செய்துள்ளதாக, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (manusha nanayakkara) தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
"Ethera Api Organisation" இன் குவைத் கிளை ஏற்பாடு செய்திருந்த "Sri Lankan Summer Nights" இசை நிகழ்ச்சியில் இந்த இலங்கையர்கள் கலந்து கொண்ட நிலையிலேயே கைது செய்யப்பட்டதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
கைது செய்யப்பட்டவர்களில் இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்களும் உள்ளடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
I have been notified that Kuwait has arrested 24 Sri Lankans, including organizers & musicians, who attended an event organized by JVP-led Ethara Api organization. I have contacted our embassy & they are working with Kuwaiti officials to secure their release as soon as possible pic.twitter.com/UGIAJrNFdw
— Manusha Nanayakkara (@nanayakkara77) August 3, 2024
இந்தச் சம்பவம் குறித்து குவைத் தூதரகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |