டொனால்ட் ட்ரம்பின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் அமெரிக்க உச்ச நீதிமன்றம்
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் போட்டியிட முடியுமா என்பதை தீர்மானிக்கும் வரலாற்று சிறப்புமிக்க வழக்கை விசாரிக்க உள்ளதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு வாக்கெடுப்பில் இருந்து அவரை நீக்கிய கொலராடோ மாநில நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் மேற்கொண்ட மேல்முறையீட்டை விசாரிக்க நீதிபதிகள் ஒப்புக்கொண்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெப்ரவரி மாதம் விசாரணைக்கு
இந்த வழக்கு பெப்ரவரி மாதம் விசாரணைக்கு வர உள்ளது, மேலும் இந்த வழக்கின் முடிவு நாடு முழுவதும் நடை முறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம்
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் கபிடல் கட்டடத்தை முற்றுகையிட ஊக்குவித்ததாக தெரிவித்து பல மாநிலங்களில் வழக்குப் பதிவு செய்து டொனால்ட் டிரம்ப்பை தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்ய முயற்சி நடப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |