யாழில் திடீரென பற்றி எரிந்த வீடு! காவல்துறையினர் விசாரணை
Sri Lanka Police
Jaffna
Fire
By Laksi
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்று தீயில் எரிந்து முழுமையாக சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அராலி கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று(1) இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
வீட்டில் உள்ளவர்கள் எதிர்பாராத நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது, இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவரவில்லை.
உயிர்ச் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. இருப்பினும் வீட்டில் உள்ள சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 13 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்