பலாமர கிளையை வெட்ட ஏறிய சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கு ஏற்பட்ட அவலம்
பனாகொட இராணுவத் தலைமையகத்தின் ஜன்னலுக்கு மேலே இருந்த கொங்கிறீட் படியில் இருந்து தவறி வீழந்து கோப்ரல் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர், பொல்கஹகொடுவ, குரணகம, அகிரிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட முதலாவது பொறியியலாளர் படைப்பிரிவில் பணிபுரிந்த 32 வயதுடைய லான்ஸ் கோப்ரல் ஜி.பி.எம்.ரத்நாயக்க என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
கால் தவறி தரையில் விழுந்ததில் விபத்து
உயிரிழந்த லான்ஸ் கோப்ரல் இராணுவத் தலைமையகக் கட்டடத்தின் மேற்கூரை வரை நீண்டிருந்த பலா மரத்தின் கிளையை வெட்டுவதற்காக அலுவலகத்தின் ஜன்னலுக்கு மேலே உள்ள கொங்கிரீட் படியில் நின்று கொண்டிருந்தபோது, அவரது கால் தவறி தரையில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
அப்போது, அவரது குழுவைச் சேர்ந்த சுமார் பதினைந்து பேர் அருகில் இருந்ததாகவும், உடனடியாகச் செயற்பட்ட படையினர், படுகாயமடைந்த லான்ஸ் கோப்ரலை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
