வீட்டு முற்றத்தில் சைக்கிள் ஓட்டிய சிறுமிக்கு நேர்ந்த துயரம் (படங்கள்)
சிறுமிக்கு நேர்ந்த துயரம்
வீட்டுக்கு முன்னால் உள்ள முற்றத்தில் துவிச்சக்கரவண்டி ஓட்டிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமி மீது கார் ஒன்று மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக மொரகஹாஹேன காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மொரகஹஹேன, மில்லவ பொல்வத்தையைச் சேர்ந்த தினிதி சத்சராணி ஜான்ஸ் என்ற சிறுமியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கட்டுப்பாட்டை இழந்த கார்
வீட்டில் இருந்து சற்று தூரத்தில் சிறிய மலையுடன் கூடிய பக்கவாட்டு வீதியில் வந்து கொண்டிருந்த காரை சாரதி கட்டுப்படுத்த முடியாமல் சிறுமியின் வீட்டின் வாயிற்கதவை உடைத்து சிறுமியை மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கார் மோதி துவிச்சக்கரவண்டியை ஓட்டிக்கொண்டிருந்த சிறுமியையும் சேர்த்து, அதனுடன் முன்னோக்கி இழுத்து அதிவேகமாக வீட்டின் பின்புறம் சென்று கார் நின்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த சிறுமி ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
