இனிய பாரதியை காட்டிக் கொடுத்த பிள்ளையான் : தாயகத்தை உலுக்கிய கொலைகள்
கருணா மற்றும் பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான கே.புஷ்பகுமார் என அழைக்கப்படும் இனியபாரதியின் கைது தற்போது தமிழ் அரசியல் களத்திலும் தமிழர் தரப்பிலும் பாரிய பேசுபொருளுக்குரிய விடயமாக மாறியுள்ளது.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (06) காலை குற்றப் புலனாய்வு பிரிவினரின் அணியொன்றினால் மேற்கொள்ளப்பட்டது.
திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள முனைக்காடு பகுதியில் வைத்து வீட்டுக்குள் மறைந்திருந்த வேளை இனிய பாரதி புலனாய் பிரிவினால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த விடயத்தை அம்பாறை மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்திருந்தார்.
அத்தோடு, இனியபாரதியின் சகாவான சசீதரன் தவசீலன் என்பவரும் அவருடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த கைது தொடர்பிலான பின்னணி, கைதுக்கான முக்கிய காரணங்கள் மற்றும் இந்த கைதுகள் இவர்களுடன் தொடர்புடைய அரசியல் தலைமைகளுக்கு ஏற்படுத்த போகும் பின்விளைவுகள் என்பவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
