கனடாவில் வீதியொன்றில் கொட்டிக் கிடந்த பெருமளவு பணம் : எடுக்க அலைமோதிய கூட்டம்
கனடாவின் வீதியொன்றில் பெருமளவு நாணயத்தாள்கள் கொட்டிக் கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவின் தென்கிழக்கு கல்கரி பகுதியில் எப்பல்வுட் மற்றும் 68 ஆம் இலக்க வீதியில் இவ்வாறு பெருந்தொகையான பணம் வீதியில் கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கொட்டிக்கிடந்த பணத்தில் 20 டொலர் பெறுமதியான நாணயத்தாள்கள் பெரும் எண்ணிக்கையில் கிடந்ததாகவும் இந்த பணத்தை எடுப்பதற்கு மக்கள் பெருமளவில் குழுமியதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
5000 டொலர் நாணயத்தாள்களை சேகரித்த அதிகாரிகள்
இவ்வாறு வீதியில் கிடந்த 20 டொலர் பெறுமதியான 5000 டொலர் நாணயத்தாள்களை அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.
இந்த நாணயத்தாள்கள் எங்கிருந்து கிடைக்கப் பெற்றன ? யார் இதை தொலைத்தார் ? போன்ற எந்த ஒரு விபரமும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதுடன் இந்த பணத்திற்கு சொந்தக்காரர் யார் என்பதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.
பணத்தின் உரிமையாளரை தேடும் காவல்துறை
இதனிடையே அதே பகுதியில் சிறிய அளவிலான போதைப் பொருட்களையும் கண்டுபிடித்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர், ஆனால் பணம் மற்றும் போதைப்பொருள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
பணத்தின் உரிமையாளரை காவல்துறையினர் தற்போது தேடி வருகின்றனர்.