மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு..!
Nuwara Eliya
Sri Lanka Police Investigation
Death
By Dharu
தலவாக்கலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று மதியம் மீட்கப்பட்டதாக தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.
மரண விசாரணை
அதன்பின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை.
சுமார் 35ற்கும் 50ற்கும் இடையிலான வயது மதிக்கதக்க ஆண் எனவும் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி