அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பதற்றமடைந்த மக்கள்
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
டெக்ஸாஸ் மாகாணம், மிட்லாண்ட் நகருக்கு 22 கி.மீ. வடக்கு வடமேற்கே 9 கி.மீ. ஆழத்தில் வெள்ளிக்கிழமை(16) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் ரிக்ச்டர் அளவுகோலில் 5.4 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம்
குறித்த நிலநடுக்கம் மாகாண வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக கருதப்படுகின்றது.
அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சக்தி குறைந்த பின்னதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் குடியேற்றப்பகுதிகளிலும் தொலைதூரப் பகுதிகளான அமரில்லோ, அபிலெனி பகுதிகளிலும் உணரப்பட்டன.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
M5.3 #earthquake In Texas near Midland!. At another oil and gas pumping operations. The other 5.3 hit a few weeks ago more to the West. 12/16/2022 @AnayeliNews @TexasTribune all those pads are where the rigs are. ?️⚠️☢️ pic.twitter.com/6Tq4xqvLTn
— Casimiro Cervantes (@CasimiroCervan4) December 17, 2022

