இஸ்ரேலில் இடம்பெற்ற அனர்த்தம் : அவசரமாக வெளியேற்றப்படும் மக்கள்
இஸ்ரேலின் (israel)ஜெருசலேமுக்கு அருகிலுள்ள எஸ்தாவோல் காட்டில் உள்ள ஒரு பெரிய புதர் காடு இன்று (30) மதியம் தீப்பிடித்தது. இதன் விளைவாக, இஸ்ரேலிய அதிகாரிகள் அங்குள்ள மக்களை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர், மேலும் டெல் அவிவ்-ஜெருசலேம் நெடுஞ்சாலைக்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டதிலிருந்து, சாலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து காரணமாக தலைநகர் டெல் அவிவின் மேற்கே உள்ள இந்த மலைப் பகுதியில் இருந்து ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஐந்து இடங்களில் தீ விபத்து
எஸ்தாவோல் மலைகளில் குறைந்தது ஐந்து இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக இஸ்ரேல் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை தெரிவித்துள்ளது.தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் பலத்த காற்று வீசியதால், தீயை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது.
இஸ்ரேலிய அதிகாரிகள், தற்போது அந்தப் பகுதியில் உள்ள பல மலைகளில் இருந்து மலை ஏறுபவர்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.
இருப்பினும், இதுவரை எந்த உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
அதேவேளை, அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் கடுமையான வானிலை நிலைமைகள் தொடரும் எனவும் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
