அநுர தரப்பை வீழ்த்த வகுக்கப்படும் வியூகம் - அவசரமாக கூடும் முன்னாள் எம்.பிக்கள்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) சிறப்பு கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் வேண்டுகோளின் பேரில் இன்று (08) இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
அந்த வகையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை (United National Party) பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
அரசியல் நடவடிக்கை
கூட்டு எதிர்க் கட்சிகளின் நடவடிக்கைகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்று வருகின்றன.
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களைப் பெற்று எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதே எதிர்க்கட்சித் தலைவரின் நோக்கமாகும்.
ரணில் நாடாளுமன்றத்துக்கு செல்வதாக இருந்தால், சரியான நேரம், காலம் பார்த்து அறிவிப்பார் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி
இவ்வாறான சூழ்நிலையில் எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்வரும் காலங்களில் கூட்டு எதிர்க்கட்சி ஒன்றை அமைக்கும் என்றும் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியும் அதில் கலந்துகொண்டு, கூட்டாக செயற்படுவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் ருவன் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்வரும் காலங்களில் கூட்டு எதிர்க்கட்சி ஒன்றை அமைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஓரிரு தினங்களில் இறுதி முடிவு எட்டப்படும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
