நல்லூரில் கண்ணீரை வரவழைத்த தண்ணீரின் கதை நாடகம்
செம்முகம் ஆற்றுகைக் குழுவின் “தண்ணீரின் கதை” நாடக ஆற்றுகை நல்லூரில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நாடக ஆற்றுகை நேற்றைய தினம் (18) இடம்பெற்றுள்ளது.
நல்லூர் முருகன் ஆலய திருவிழாவை முன்னிட்டு “நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி” எனும் தொனிப் பொருளில் வடக்கின் நிலத்தடி நீர் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த (WASPAR & Young Water Professionals) முயற்சியில் வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்திட்டத்தின் இரண்டாவது நீர்வளக் கண்காட்சி இடம்பெற்று வருகின்றது.
கதை நாடகம்
குறித்த கண்காட்சியானது கடந்த வெள்ளிக்கிழமை (15) மாலை நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஆரம்பமான நிலையில் தொடர்ந்து வரும் 24 ஆம் திகதி வரை வரை இடம்பெறவுள்ளது.
நீர்வள சபை, நீர்ப்பாசண திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, யாழ் மாநகர சபை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ் இந்துக்கல்லூரி மற்றும் பல தன்னார்வலர் அமைப்புகளின் கூட்டு முயற்சியாக இந்த கண்காட்சி இடம்பெறுகின்றது.
தண்ணீரின் கதை
நீர்வளக் கண்காட்சியின் ஒரு கட்டமாக ஊருணி ஆற்றுகைக் களத்தில் பல்வேறு ஆற்றுகை நிகழ்வுகளும், கலந்துரையாடல்களும் தினமும் மாலை வேளையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நேற்றைய தினம் (18) திங்கட்கிழமை மாலை செம்முகம் ஆற்றுகைக் குழுவின் “தண்ணீரின் கதை” நாடக ஆற்றுகை இடம்பெற்றது.
நிலத்தடி நீரை மட்டும் நம்பியிருக்கும் யாழ்ப்பாணத்தில் எதிர்காலத்தில் தண்ணீர் இல்லாமல் போனால் என்னவாகும் என்பதனை சித்தரிக்கும் வகையில் நாடகம் உயிர்ப்புள்ளதாக நாடகம் இடம்பெற்றுள்ளது.
அனுபவ பகிர்வு
பார்வையாளர்களை கண்ணீரில் நனைய வைத்த நாடகத்தின் பின் பலரது அனுபவ பகிர்வுகளும் உருக்கமாக அமைந்திருந்தன.
நீர்வளக் கண்காட்சியின் ஐந்தாம் நாளான இன்று (19) செவ்வாய்க்கிழமை ஆற்றுகை நிகழ்வாக பாடல் நிகழ்வுகளும் “கேணி: நீர் மரபுரிமைக் கட்டுமானங்களைக் காக்க வேண்டிச் சில முன்வைப்புகள்” என்கிற தலைப்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் மற்றும் ஆய்வாளருமான அகிலன் பாக்கியநாதனின் கருத்துரையும் மற்றும் உரையாடலும் இடம்பெறவுள்ளது.
நிலத்தடி நீரும் எமது பிரதேச நிலக்கட்டமைப்பு மற்றும் வழுக்கையாறு திட்ட மாதிரிகளின் கண்காட்சிகள், விஞ்ஞான விளக்கங்கள், ஆய்வு முடிவுகள், விளையாட்டுகள், புதிர்ப்போட்டிகளில் பங்கேற்கும் சிறார்களுக்கான ஏராளமான பரிசுப் பொருட்களுடன் நிலத்தடி நீரை பக்குவமாக பாதுகாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கை இக்கண்காட்சி ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 23 மணி நேரம் முன்
