கொழும்பு வீதியில் திடீரென தோன்றிய குழி: மக்களுக்கு எச்சரிக்கை
Colombo
Galle
Sri Lanka
Sri Lankan Peoples
By Shadhu Shanker
கொழும்பு- வெள்ளவத்தை, பகுதியில் உள்ள பிரதான வீதியில் பாரிய குழியொன்று தோன்றியுள்ளது.
வீதியின் உட்புறத்தில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக இந்த குழி தோன்றியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் அப்பகுதி பாதுகாப்பு நோக்கங்களுக்காக மூடப்பட்டுள்ளதுடன் அங்கு சற்று வாகன நெரிசல் காணப்படுகின்றது.
இதன் காரணமாக வெள்ளவத்தை பகுதியிலிருந்து செல்லும் வீதி ஒரு பாதைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வீதியில் தோன்றிய குழி
இதன்படி, காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் சாரதிகள் லிலீ அவென்யூ கிளை வீதியூடாக கரையோர வீதியில் பிரவேசித்து கொழும்பு நோக்கி பயணிக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணிக்கும் சாரதிகள் வழமை போன்று வெள்ளவத்தை ஊடாக பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 6 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி