முட்டையொன்றுக்கு ரூபா 20 இலாபம் சம்பாதிக்கும் உற்பத்தியாளர்கள்
Sri Lanka
Egg
By Sumithiran
முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் மூலம் ரூபா 20 இலாபம் சம்பாதித்து வருவதாக முட்டை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அனுர மாரசிங்க நேற்று (31ஆம் திகதி) தெரிவித்தார்.
தற்போது ஒரு முட்டை உற்பத்தி செய்ய சுமார் ரூபா 20 செலவாகும் என்றும், ரூபா 10 இலாபத்தை வைத்து ஒரு முட்டையை 30 ரூபாய்க்கு பண்ணையில் இருந்து கொடுக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
35 ரூபாய்க்கு குறைவாக

அதன்படி அனைத்து செலவுகளையும் ஏற்று ஒரு முட்டையை 35 ரூபாய்க்கு குறைவாக சந்தையில் விற்பனை செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
முட்டை மாஃபியாவால் அதிகரித்திருக்கும் விலை

முட்டை மாஃபியாவை கட்டுப்படுத்த வர்த்தக அமைச்சர் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்து சந்தைக்கு விடாமல் இருந்திருந்தால் தற்போது முட்டை ஒன்றின் விலை 60-65 ரூபாவை தாண்டியிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.