வீரர்களை உற்சாகப்படுத்த உக்ரைன் சென்ற ரஷ்ய தளபதிக்கு ஏற்பட்ட நிலை
Russo-Ukrainian War
Ukraine
Russia
By Sumithiran
உக்ரைனில் போரிடும் தமது படையினருக்கு உற்சாகத்தை வழங்கும் நோக்கில் சென்ற ரஷ்ய தளபதியொருவர் தவறுதலாக கண்ணிவெடியில் கால்வைத்ததில் உடல் சிதறி பலியாகியுள்ளார்.
இவ்வாறு பலியானவர் Arman Ospanov என்ற தளபதியாவார்.
வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக
ரஷ்ய விமானப்படைகளின் ஒரு பிரிவின் தலைவரான Arman Ospanov, உக்ரைனில் போரிடும் ரஷ்ய வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக ரஷ்ய படைகள் ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பிராந்தியங்களுக்கு சென்றுள்ளார்.
தவறுதலாக கண்ணிவெடியில் கால் வைத்ததால்
ஆனால், அவர் தவறுதலாக கண்ணிவெடியில் கால் வைத்ததால் உடல் சிதறி பரிதாபமாக பலியானார். இந்த தகவலை ரஷ்ய தரப்பும், உக்ரைன் தரப்பும் உறுதி செய்துள்ளன.
உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, இதுவரை 365,170 ரஷ்ய படையினர் உயிரிழந்துள்ளதாக கருதப்படுகிறது.இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெறுமதிமிக்க தளபதிகளும் அடங்குகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்