மொட்டுவிற்கு தனிவேட்பாளர் உறுதி..!
எதிர்வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தனி வேட்பாளர் நிச்சயமாக முன்வைக்கப்படுவார் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி(Janaka Tissakuttiarachchi) தெரிவித்தார்.
அப்போது இருந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே ரணில் விக்ரமசிங்கவை(ranil wickremesinghe) ஆட்சிக்கு கொண்டு வந்ததாக கூறிய திஸ்ஸ குட்டியாராச்சி,
ரணில் விக்ரமசிங்க
ரணில் விக்ரமசிங்க இல்லாமல் ரோஹித அபேகுணவர்தனRohitha Abeygunawardena),கஞ்சன விஜேசேகர(kanchana wijesekara) மற்றும் ஷெஹான் சேமசிங்க(shehan semasinghe) இருந்தாலும் அந்த பணியை சரியாக செய்திருப்பர் என்றும் தெரிவித்தார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அகலவத்தை தொகுதி மாநாட்டில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
வரிசையை நிறுத்தியவர்களோ, இரண்டு ஐம்பதுக்கு உணவு கொடுத்தவர்களோ, பால் மா பைக்க்ற்றின் விலையைக் குறைத்தோ, ஒருவரைக் கொன்றோ தலைவர்களை நியமிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ச சோம்பேறி
"நாமலை அழைத்து வர முற்படும் போது, அவர் இன்னும் சோம்பேறியாக இருப்பதாக கூறுகிறார்கள், அவர் எங்கே சோம்பேறியாக இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை," என்று திஸ்ஸ குட்டியாராச்சி மேலும் கூறினார்.
அனுரகுமாரவிடம் பொருளாதாரக் கொள்கை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |