புதுவருடத்தில் தீர்வு : தீபாவளிக்கு தீர்வு :தவறின் தீர்க்கமானமுடிவு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவிற்கு புதுவருடம்,தீபாவளி வந்தால் ஏதோ புழுகம் வந்திடும்போல.இந்தவருடமும் தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் இந்த வருடமும் அரசாங்கம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வைத் தராவிட்டால் தீர்க்கமான முடிவை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதனை அவர் எத்தனை தடவை சொன்னார் என்பது அவருக்கு கூட நினைவிற்கு வராது.
இறுதிக்கட்ட போரில் தமிழ்மக்களை கொன்றொழித்த
இறுதிக்கட்ட போரில் தமிழ்மக்களை கொன்றொழித்தவர்களில் முக்கியமானவராக கருதப்படும் முன்னாள் இராணுவத் தளபதி அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது தமிழ்மக்களை கேட்காமலே அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்தவர் சம்பந்தன்.
நல்லாட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு
பின்னர் மைத்திரி ரணில் நல்லாட்சிக்கு எவ்வித ஒப்பந்தமும் செய்யாமல் வெறும் நம்பிக்கை அடிப்படையில் ஐந்துவருடம் அவர்களது ஆட்சி முடிவடையும் வரை நிபந்தனையற்ற ஆதரவை அளித்தவர் அவர்.
அப்போது புதுவருடத்தில் தீர்வு தீபாவளிக்கு தீர்வு என தமிழரை ஐந்து வருடமாக ஏமாற்றியவர் அவர்.
இப்போது மீண்டும் புதுக்கதை விடுகிறார் அவர்.
இவர் கூறும் சர்வதேசம்
தீர்வில்லையென்றால் சர்வதேசத்தில் முறையிடுவோம் என்ற கதை வேறு.
சர்வதேசம் என்றால் யார்? அமெரிக்கா, தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஐ.நா. யுத்தம் முடிந்து இதுவரையான நீண்டகாலத்தில் இவர் கூறும் சர்வதேசம் தமிழ்மக்களுக்கு செய்தது என்ன?
வெறும் புழுடா விடாமல் யதார்த்தமாக ஏதாவது கதையுங்கள் அல்லது செய்யுங்கள் ஐயா..!