மன்னாரில் இராணுவத்தினரால் குண்டுவைத்து தகர்க்கப்படவுள்ள நீர்த்தாங்கி
மன்னார் மாவட்டத்தில் தற்போது பாவனையில் இல்லாத நீர்த்தாங்கி நாளை மறுதினம் இராணுவத்தினரால் குண்டு வைத்து தகர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் மாவட்டம் உப்புக்குளம் கிராமத்தில் அப் பகுதிக்கான நீர் விநியோகத்திற்கென துறைமுகங்கள் அதிகார சபையினால் 1985ஆம் ஆண்டு குறித்த நீர்த் தாங்கி கட்டப்பட்டது.
இவ்வாறு கட்டப்பட்ட தாங்கியில் இருந்து எந்தவொரு நீர் விநியோகமும் மேற்கொள்ளாத காரணத்தால் நீர்த்தாங்கி முழுமையாக பழுதடைந்து விட்டது. இதேநேரம் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் மக்கள் குடியிருப்புக்கள் அதிகரித்துவிட்டன.
இதன் காரணத்தால் பழுதடைந்த நீர்த்தாங்கி இடிந்துவிழும் நிலையில் உள்ளதால் ஆபத்து ஏற்படும் எனக் கருதி இந்த நீர்த் தாங்கியை இடித்து அழிக்க அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன.
இந்த நீர்த்தாங்கியே நாளை மறுதினம் காலை 8.30 மணியளவில் இராணுவத்தின் பொறியியல் பிரிவின் உதவியுடன் குண்டு வைத்து தகர்க்கப்படவுள்ளது.