யாழில் உயிருடன் பிடிபட்ட முதலை கிளிநொச்சிக்கு
Jaffna
Kilinochchi
Sri Lanka
By Raghav
யாழ்ப்பாணம் (Jaffna) - நெடுந்தீவு (Neduntheevu) பகுதியில் முதலையொன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை (18.07.2025) முதலையொன்று உயிருடன் பிடிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முதலை
நெடுந்தீவு, வெட்டுக்களிப் பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்தே குறித்த முதலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

5 அடி நீளமுடைய குறித்த முதலையானது, நெடுந்தீவு பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக நடவடிக்கைகளுக்காக குறிகாட்டுவானுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இதனையடுத்து முதலையானது கிளிநொச்சி பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்குக் கொண்டுசெல்லப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |