மொட்டு தரப்பு அரசியல்வாதியின் அழைப்பில் ஒன்று சேர்ந்த ரணில் - ராஜபக்ச கூட்டணி
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மற்றும் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
முன்னாள் அமைச்சரவை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) வின் மகளின் திருமண நிகழ்வில் வைத்து இன்றைய தினம் இருவரும் சந்தித்துள்ளனர்.
கடந்த 07ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ரணில் - ராஜபக்ச
இந்த சட்ட வரைபின்படி, முன்னாள் ஜனாதிபதி அல்லது மனைவிக்கு வழங்கப்படும் எந்த ஒரு வீடு, மாதாந்திர கொடுப்பனவும், மாதாந்திர செயலக கொடுப்பனவு, போக்குவரத்து, பிற வசதிகள் மற்றும் மாதாந்திர ஓய்வூதியமும் இரத்து செய்யப்படவுள்ளன.
மேலும், குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் மகிந்த மற்றும் ரணில் ஆகியோர் ,முன்னாள் அமைச்சரவை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வின் மகள் உதார ரணதுங்கவின் திருமண விழாவில் ஒரே மேசையில் அமர்ந்து உள்ளதுடன், பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் பல்வேறு சர்ச்சையான கருத்துக்களும் எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா
