இஸ்ரேலுக்கு ஏற்படவுள்ள பேரிழப்பை தடுத்த அமெரிக்க போர்க்கப்பல்!
இஸ்ரேலை நோக்கி வீசிய ஏவுகணைகளை அமெரிக்கா போர்க்கப்பல்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரமடைந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலானது 15 நாட்களாக தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், ஒவ்வொரு நாடுகளும் தமது ஆதரவுகளையும் எதிர்ப்புகளையும் தெரிவித்த வண்ணம் உள்ளன.
அதிபர் ஜோ பைடன்
உலக வல்லரசான அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் சென்ற நிலையில் இஸ்ரேலுக்கு தேவையான அனைத்தையும் அமெரிக்கா செய்யும் என உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதல் தொடங்கிய முதல் நாளே அமெரிக்கா மத்திய தரைக்கடல் பகுதிக்கு மிகப்பெரிய போர் கப்பலை அனுப்பியது.
இந்த போர் கப்பலை இஸ்ரேல் - ஹமாஸ் போர் பிராந்திய அளவில் விரிவடைவதை தடுக்கவும், பிராந்தியத்தில் இருக்கும் பிற பயங்கரவாத அமைப்புகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கவுமே அமெரிக்கா அனுப்பியது.
ஏவுகணை தாக்குதல்
மேலும், சில போர் கப்பல்களையும் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இஸ்ரேலை நோக்கி ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசி தாக்கிய போது ஏவுகணைகள் இஸ்ரேலை அடைவதற்கு முன்பே அமெரிக்காவின் யுஎஸ்எஸ் கார்னி என்ற போர்க்கப்பல் அவற்றை சுட்டு வீழ்த்தியுள்ளது.
இதற்கமைய இஸ்ரேல் மீது நடத்தப்பட இருந்த மிகப்பெரிய ஏவுகணை தாக்குதலை அமெரிக்கா முறியடித்ததாக கூறப்படுகிறது.