அதிகாலையில் கோர விபத்து : சம்பவ இடத்திலேயே பலியான இரண்டு பிள்ளைகளின் தாய்
மருதானையில் (Maradana) இருந்து நாவலப்பிட்டிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் விபத்துக்குள்ளானதில், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (31.07.2025) இடம்பெற்றுள்ளது.
மேலும் விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கணவர் படுகாயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கினிகத்தேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தம்பதியினர் விபத்து
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரைப் பார்க்க மோட்டார் சைக்கிளில் தம்பதியினர் சென்றுள்ளனர்.
இதன்போது, ஹட்டன்-கொழும்பு பிரதான சாலையில் உள்ள மில்லகஹமுல பகுதியில் கொழும்பிலிருந்து வட்டவளை நோக்கிச் சென்ற டிப்பர் ரக வாகனம வளைந்த பகுதியில் கவனக்குறைவாக மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றுள்ளது.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் சறுக்கி கவிழ்ந்தது. மோட்டார் சைக்கிளின் பின்னால் சென்ற மனைவி டிப்பர் வாகனத்தின் பின் சக்கரத்தின் கீழ் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்த விபத்தில் மருதானை மொஹிதீன் மஸ்ஜித் பகுதியில் வசித்து வந்த இரண்டு குழந்தைகளின் தாயான நை ஜனிரி இக்ராம் (44) என்பவரே உயிரிழந்துள்ளார் .
உயிரிழந்த பெண்ணின் சடலம் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரியிடம் பிரேத பரிசோதனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
