வெளிநாடொன்றில் தூக்கத்தை வலியுறுத்தி இடம்பெற்ற தூக்கப்போட்டி
தென் கொரியாவில் அதிகரித்து வரும் துாக்கமின்மையை போக்குவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்நாட்டில் துாக்கப் போட்டி நடத்தப்பட்டது.
தென்கொரியா, ஓயாத உழைப்பு மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்ற நாடு. இதனால், உலகின் அதிக வேலைப்பளு மற்றும் துாக்கமின்மை கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது.
துாங்குவதற்கான போட்டி
இதையடுத்து, துாக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு, தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள ஹான் நதிக்கரையில் உள்ள யோயுடோ ஹாங்கங் பூங்காவில் துாங்குவதற்கான போட்டி மே 2 ல் நடந்தது.

சியோல் மாநகராட்சியால் ஆண்டுதோறும் நடத்தப்படும், 'பவர் நேப்' என்ற இப்போட்டியில், 170க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இப்போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு, வேண்டுமேன்றே இறகால் வருடுவது, கொசு சத்தங்கள் உள்ளிட்ட பல தொந்தரவுகள் போட்டி நடத்துபவர்களால் செய்யப்படும்.
80 வயது முதியவர் முதலிடம்
இத்தகைய தொந்தரவுகளை தாண்டி ஆழ்ந்த துாக்கத்தை தொடர்கிறவர்களே போட்டியின் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

மேலும், துாக்கத்தின் போது, பங்கேற்பாளரின் இதய துடிப்பும் கண்காணிக்கப்படுகிறது. இதய துடிப்பு சீராகவும், அமைதியாகவும் இருக்க வேண்டுமென்பது விதி. இப்போட்டியில், 80 வயது முதியவர் ஒருவர் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |