யாழில் நியுமோனியா காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன்
Pneumonia
Jaffna
Death
By Shalini Balachandran
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நியுமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது நேற்று(10) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
துன்னாலை வடக்கு, கரவெட்டியைச் சேர்ந்த முத்துலிங்கம் சிவதர்ஷன் (வயது 29) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம்
உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதுடன் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனடிப்படையில் நியுமோனியா காய்ச்சலாலேயே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்