தங்கத்திற்கு இணையாக மாறிய தண்ணீர் : நீரின்றி வாடும் மக்கள்
இந்தியாவின் பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியுறுகின்றனர்.இதனால் தண்ணீர் அங்கு தங்கத்திற்கு இணையாக உள்ளதாக மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு நகரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நகரில் 3,000க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் நீரின்றி வறண்டு காணப்படுவதால் மக்கள் தண்ணீர் வாகனத்தை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கோடைகாலம் தொடங்கும் முன்பே
கோடைகாலம் தொடங்கும் முன்பே பெங்களூருவில் தண்ணீர் பிரச்னை தொடங்கிவிட்டது. ஒரு கோடியே 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெங்களூருவில், மக்களின் அன்றாட தண்ணீர் தேவையில் 1,500 மில்லியன் லீட்டர் பற்றாக்குறை உள்ளது.
தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு தனியார் பாடசாலைகள், பயிற்சி மையங்கள் தற்காலிகமாக மூடி, மாணவர்களுக்கு ஒன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |