கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட குழந்தை : வெளிநாடுகளில் இருந்து வந்த அழைப்புகள்
Sri Lanka Police
Kurunegala
Sri Lanka Police Investigation
By Sumithiran
குருநாகல்(kurunegala), மாவதகம, பரகஹதெனியவில் வயலில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இரண்டு நாள் பெண் குழந்தையை தத்தெடுக்க ஆர்வம் காட்டியவர்களிடம் இருந்து 1,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கனடா(canada), அவுஸ்திரேலியா(australia), நியூசிலாந்து(new zealand), அமெரிக்கா(us) மற்றும் இத்தாலி(italy) போன்ற நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்தும் பல அழைப்புகள் வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது
தத்தெடுப்பு செயல்பாட்டில் உள்ள சட்ட நடைமுறை
குழந்தையை தத்தெடுப்பது குறித்து விசாரித்த அனைவருக்கும் தத்தெடுப்பு செயல்பாட்டில் உள்ள சட்ட நடைமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை குழந்தையை கைவிட்டுச் சென்ற தாய், இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி