ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பலஸ்தீன தரப்பில் விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை
ஆயுதங்களை உடனடியாக ஒப்படையுங்கள் என ஹமாஸ் (Hamas) பயங்கரவாதிகளை பலஸ்தீன (Palestine) பலஸ்தீனத்தின் அதிகார சபையின் அதிபரான மஹ்மூத் அப்பாஸ் (Mahmoud Abbas) வலியுறுத்தியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகளின் நிலைப்பாட்டை நாங்கள் பாராட்டுகின்றோம்.
இதுவரை இவ்வாறு செய்யாதவர்கள், இதை பின்பற்றுமாறு நாங்கள் அழைக்கின்றோம்.
ஆயுதக் குழுக்கள்
பலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் சபையில் முழுமையான உறுப்பினராவதற்கு உங்கள் ஆதரவை நாங்கள் கோருகின்றோம்.
எதிர்காலத்தில் காசாவை நிர்வகிப்பதில் ஹமாஸ் எவ்வித பங்களிப்பையும் வழங்கக்கூடாது.
ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்கள் தங்கள் ஆயுதங்களை தற்போதைய பலஸ்தீன தேசிய ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
பாதுகாப்புப் படை
எங்களுக்கு வேண்டியது ஆயுதங்கள் இல்லாத ஒரே சட்டத்தின் கீழ், ஒரே ஒரு சட்டப்பூர்வமான பாதுகாப்புப் படையைக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த அரசு.
கடந்த 2023 ஒக்டோபர் ஏழாம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலையும் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் நாங்கள் கண்டிக்கிறோம்.
போர் முடிவுக்கு வந்த பின், ஜனாதிபதி பதவி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நடத்தப்படும்.
தற்போது அதிகார சபையிடம் உள்ள அதிகாரம், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மாற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, மூன்று மாதங்களுக்குள் ஒரு இடைக்கால அரசியலமைப்பு வரைவை அமைப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
