போதைப்பொருள் இல்லாததால் நபர் செய்த மோசமான செயல்
குருணாகல் பேருந்து நிலையத்திற்கு அருகில் போதை பொருளுக்கு அடிமையானவர் தன்னைத்தானே கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் குருணாகல் பிரதேசத்தை சேர்ந்தவர் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
காவல்துறையினரின் விசாரணை
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அவரிடம் உட்கொள்வதற்காக தன்வசம் போதைப்பொருள் இல்லாத காரணத்தினால் கழுத்து மற்றும் மார்பு பகுதிகளை கத்தியால் குத்தி தன்னைத்தானே காயப்படுத்தியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நபருக்கு எதிராக பல்வேறு குற்றங்கள்
காயமடைந்த நபருக்கு எதிராக பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 13 குற்றச்சாட்டுகள் காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருணாகல் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |