ஈரானில் வீழ்த்தப்பட்ட F-15 போர் விமானத்தின் இரண்டாவது வீரரும் மீட்பு...! ட்ரம்பின் அறிவிப்பு
🛑 புதிய இணைப்பு
ஈரானுக்கு மேலே அமெரிக்காவின் F-15 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் மாயமான இரண்டாவது போர் வீரரும் மீட்கப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்போது உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில், கடந்த சில மணிநேரங்களில் அமெரிக்க இராணுவம் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் துணிச்சலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றை நடத்தி முடித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எங்களது அற்புதமான விமானப் படை அதிகாரிகளில் ஒருவரான இவர், மிகவும் மதிக்கப்படும் ஒரு கர்னல் (Colonel) ஆவார் எனவும் அவர் இப்போது பாதுகாப்பாகவும் நலமுடனும் இருக்கிறார் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
🛑 முதலாம் இணைப்பு
ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் F-15 போர் விமானத்தின் இரண்டாவது போர் வீரரும் அமெரிக்கப் படைகளால் மீட்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிகாரிகள் வழங்கிய தகவலை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன.
கடந்த ஐந்து வாரங்களாக நடைபெற்றுவரும் இந்தப் போரில் ஈரானுக்கு மேலே முதன்முதலாக வீழ்த்தப்பட்ட இந்த அதிநவீன போர் விமானத்திலிருந்து ஏற்கனவே ஒருவர் மீட்கப்பட்டிருந்தார்.
பாரிய பணப்பரிசு
இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் பலனாக, தற்போது அந்த விமானத்தின் மற்றுமொரு பணியாளரும் மீட்கப்பட்டுள்ளார்.
ஈரானியத் தரப்பு இவர்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பாரிய பணப்பரிசுகளை அறிவித்திருந்தது.

இருந்தபோதிலும், அமெரிக்கப் படைகள் இருவரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளமை ஒரு முக்கிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
இந்த மீட்பு நடவடிக்கைகள் மற்றும் மீட்கப்பட்ட வீரர்களின் உடல்நிலை குறித்த மேலதிக விபரங்களை அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |