அணுமின் நிலையத்தில் பெரும் கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் : ஈரான் எச்சரிக்கை

United Nations United States of America Israel Iran
By Sathangani Apr 05, 2026 07:50 AM GMT
Sathangani

Sathangani

in உலகம்
Report

ஈரானின் ஒரே செயல்பாட்டு அணுமின் நிலையமான புஷெர் அணுமின் நிலையத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களால் பெரும் கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் புஷெர் அணுமின் நிலையத்திற்கு அருகே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளமை சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி, ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸிற்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஈரானை வழிநடத்திய இராணுவத் தளபதிகள் பலர் பலி : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரானை வழிநடத்திய இராணுவத் தளபதிகள் பலர் பலி : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

கதிர்வீச்சு கசிவு ஏற்படும் 

அந்த கடிதத்தில், இந்த தாக்குதலின் காரணமாக அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு கசிவு ஏற்படும் நேரடி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் அணுசக்தி நிலையங்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் ஈரான் நாட்டை மட்டும் பாதிக்காது என குறிப்பிட்டுள்ளார்.

அணுமின் நிலையத்தில் பெரும் கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் : ஈரான் எச்சரிக்கை | Iran Warns Strikes On Iranian Nuclear Facilities

இது ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கும் மனித மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும். இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச பாதுகாப்பு விதிகளுக்கு முரணானது என்பதையும் அவர் அதில் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் பெப்ரவரி மாதத்தின் பிற்பகுதியிலிருந்து அணுசக்தி தொடர்பான தளங்கள் மீது நடத்தப்பட்டதாகப் பதிவான பல தாக்குதல்களை அமைச்சர் பட்டியலிட்டார்.

ஈரானில் வீழ்த்தப்பட்ட F-15 போர் விமானத்தின் இரண்டாவது வீரரும் மீட்பு...! ட்ரம்பின் அறிவிப்பு

ஈரானில் வீழ்த்தப்பட்ட F-15 போர் விமானத்தின் இரண்டாவது வீரரும் மீட்பு...! ட்ரம்பின் அறிவிப்பு

புஷேர் அணுமின் நிலையம் தாக்குதல்

அதன்படி, மார்ச் 1 அன்று, ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் இரண்டு தனித்தனித் தாக்குதல்களில் தாக்கப்பட்டதுடன் மார்ச் 17 அன்று, புஷேர் அணுமின் நிலையத்திலிருந்து சுமார் 350 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஒரு கட்டிடம் தாக்கப்பட்டது.

அணுமின் நிலையத்தில் பெரும் கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் : ஈரான் எச்சரிக்கை | Iran Warns Strikes On Iranian Nuclear Facilities

மார்ச் 21 அன்று, நடன்ஸ் அணுசக்தி நிலையத்திற்குள் இருந்த பல இடங்கள் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டதுடன் மார்ச் 24 அன்று, புஷேர் அணுமின் நிலையத்தின் சுற்றுவட்டாரப் பகுதியில் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது.

மார்ச் 27 அன்று, புஷேர் அணுமின் நிலையம் மூன்றாவது முறையாகத் தாக்கப்பட்டதுடன், கோண்டாப் கனநீர் உற்பத்தி நிலையம் தாக்கப்பட்ட நிலையில் ஷாஹித் அஹ்மதி ரோஷன் யுரேனியம் பதப்படுத்தும் தளம் குண்டுவீச்சுக்கு உள்ளானது.

இந்த நிலையில் செயல்பாட்டில் உள்ள புஷேர் ஆலைக்கு அருகில் மீண்டும் மீண்டும் நடத்தப்படும் தாக்குதல்கள் குறிப்பாக கவலையளிப்பதாக அவர் மேலும்  தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா - இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது...! எச்சரிக்கும் ஈரான்

அமெரிக்கா - இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது...! எச்சரிக்கும் ஈரான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026