ரஞ்சன் நாடாளுமன்றத்தில் இல்லாதது பெரும் குறை! கவலை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்போது நாடாளுமன்றத்திற்கு வராதது பாரிய குறைபாடாகும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
மோசடி, ஊழல் மற்றும் இலஞ்சத்திற்கு எதிராக எப்போதும் முன்னணியில் இருந்த அவர் விரைவில் விடுதலையாக வேண்டும் என்பதே சகலரினதும் வேண்டுதல் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அகுனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் (Ranjan Ramanayake) சுக துக்கங்களை விசாரிக்க சென்ற எதிர்க்கட்சித் தலைவர் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தினைத தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு (Ranjan Ramanayake) எதிராக ஒருபோதும் நிதி குற்றச்சாட்டு, அவர் மீது இலஞ்சம் வாங்கியதாகவோ, பொதுச் சொத்துக்களை திருடியதாகவோ குற்றம் சாட்டுக்க ள் இல்லை. மக்களுக்காக தன்னிடம் இருப்பதைக் கூட தியாகம் செய்த மனிதாபிமானி.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற தொடர்ச்சியான எண்ணம் அவரிடம் இருந்ததாகவும்,பல பேரிடர் சூழ்நிலைகளிலும் அவர் மறுபடி யோசிக்காமல் மக்கள் சார்பாக முன் வந்தார்.
ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake) உயர்கல்வியை முடித்து பட்டம் பெறும் நோக்குடன் செயற்பட்டு வருகின்றார். அவருக்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பது மனிதாபிமானத்தின் பெயரால் செய்யப்பட வேண்டும்.
கருணை, மனிதாபிமான மற்றும் சுகாதார பிரச்சினைகள் குறித்த முன்னுரிமையில் நீதியமைச்சர் தலையிட வேண்டும்.
அவரை விடுதலை செய்யுமாறு நான் அரச தலைவரிடம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். அந்தக் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில்அவரின் விடுதலை தொடர்பில் அரச தலைவர் துரிதமான தீர்மானத்தை எடுப்பார் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

