பேருந்துடன், முச்சக்கரவண்டி மோதிய கோர விபத்தில் சாரதி ஒருவர் பலி!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
Death
By Pavi
கொழும்பு - கொலன்னாவை வீதியில் கொத்தொட்டுவை நகருக்கு அருகில் இன்று பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர்உயிரிழந்துள்ளார்
குறித்த சம்பவம் இன்று (27.07.2026) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
சாரதி உயிரிழப்பு
கவனக்குறைவாகச் செலுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று எதிரே வந்த பேருந்துடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், பின் இருக்கையில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |