யாழ் - காரைநகரில் விபத்து!! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி (படம் இணைப்பு)
accident
jaffna
death
By Vanan
யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
காரைநகர் டிப்போவுக்கு சமீபமாக முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
உயிரிழந்தவர் காரைநகர் நெய்தலைச் சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.