50 மீற்றர் பள்ளத்தில் பாய்ந்த கார் - மூவர் காயம்
புதிய இணைப்பு
நுவரெலியா (Nuwara Eliya ) காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து திங்கட்கிழமை (10) மாலை நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் பொரலந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கந்தப்பளையிலிருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த காரொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணை
பலத்த மழையுடன் கூடிய வானிலை காரணமாக கார் வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியிலிருந்து தேயிலை தோட்டத்தில் சுமார் 50 மீற்றர் அடி பள்ளத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, காரில் பயணித்த 03 பேர் பலத்த காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த விதத்தினால் கார் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற இரண்டு மகேந்திரா வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித் விபத்து பளை முகமாலை A-9 வீதியில் நேற்று (10) மாலை பதிவாகியுள்ளது.
முன்னால் பயணித்த வாகனம் சமிக்ஞை இன்றி மாற்று வீதிக்கு திரும்ப முற்பட்ட வேளை பின்னால் வந்த இன்னொரு மகேந்திரா வாகனம் மோதி விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
சம்பவத்தில் வாகனம் பலத்த சேதங்களுக்கு உள்ளான போதும் சாரதிகளுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பளை போக்குவரத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் கணவன் - மனைவி பலி
நாவுல காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாவுல - பகமுன வீதியில் மொரகஹகந்த பகுதியில், முன்னால் பயணித்த மற்றொரு லொறியின் பின்புறத்தில் சிறிய லொறியொன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (11) அதிகாலையில் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் 47 வயதுடைய ஆண் மற்றும் 41 வயதுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இருவரும், வைத்தியசாலை சந்திப்பில் உள்ள ஹிங்குராக்கொட பகுதியில் வசிக்கும் திருமணமான தம்பதிகள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 4 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்