மட்டக்களப்பில் பாரிய விபத்து: வயோதிபர் படுகாயம்
மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவுக்குட்பட்ட தாண்டவன் வெளிப்பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் இருந்து பொலனறுவை நோக்கிச் சென்ற சிறிய ரக பாரவூர்தி வாகனமே இவ்விபத்து சம்பவத்திற்கு காரணம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி
இவ்விபத்து தொடர்பில் தெரியவருகையில் பிரதான வீதியை கடக்க முற்பட்ட வயோதிபர் ஒருவரே விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது அதிக வேகம் காரணமாக இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வண்டிகள் பாரிய சேதம் அடைந்துள்ளதுடன், முன்னால் தரித்து நின்று கொண்டிருந்த எரிவாயு சிலிண்டர் வாகனமும் இவ்விபத்தில் சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்விபத்து தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |