மட்டக்களப்பு - ஆரையம்பதியில் விபத்து : 4 பேர் படுகாயம் ( படங்கள்)
accident
batticaloa
arayambathi
By Vanan
மட்டக்களப்பு - ஆரையம்பதியில் தனியார் பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று , மட்டக்களப்பில் இருந்து களுவாஞ்சிக்குடியை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தும், களுவாஞ்சிக்குடியில் இருந்து மட்டக்களப்பை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நோர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த 4 பேரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி