யாழில் விபத்து! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி
police
death
investigation
By Shalini
கொடிகாமம் - உசனில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பட்டா படி வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில், கிளிநொச்சி அம்பாள் குளத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் சுரேஷ்குமார் என்ற 40 வயதுடைய நபரே உயிரிழந்தார்.
பளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனத்தின் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து இடம்பெற்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

