ஏ - 9 வீதியில் கோர விபத்து..! (காணொளி)
கிளிநொச்சி - பளை ஏ9 வீதியில், முள்ளியடி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் பலியானதுடன் 15 இற்கு மேற்பட்டவர்கள் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இன்று (21) மாலை 6 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
இ.போ.ச பேருந்து
திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.
முள்ளியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 100 மீற்றர் வரை இழுத்துச் செல்லப்பட்டு தடம்புரண்டுள்ளது.
குறித்த பேருந்தில் பயணித்த ஒருவர் பலியானதுடன், 15 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
மேலதிக சிகிச்சை
கடுமையான காயங்களுக்குள்ளான பலர் பளை வைத்தியசாலையிலிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு நோயாளர் காவுவண்டிகளில் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக பயணம் செய்ததன் காரணமாகவே வேகக் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானதாக வீதியில் பயணித்தவர்கள் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.









ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
