யாழில் மீண்டுமொரு கோர விபத்து - சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 14 வயது சிறுவன் (படங்கள்)
யாழ்ப்பாணம் வடமராட்சி கொற்றாவத்தை பகுதியில் கனரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதோடு இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (24) மதியம் கரணவாய் வடமேற்கு கொற்றாவத்தை கணபதி மில்லுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கொற்றாவத்தை பகுதியைச் சேர்ந்த சாகித்தியன் (வயது 14) எனும் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
எரிந்துள்ள மோட்டார் சைக்கிள்

முல்லைத்தீவு பகுதியிலிருந்து கடந்த சில வருடங்களாக கொற்றாவத்தை பகுதியில் வசிக்கும் அஜந்தன் (வயது 21) என்பவர் கை மற்றும் கால் முறிந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளும் கனரக வாகனமும் வளைவு பகுதியில் திரும்பிய போது இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.
இதேவேளை, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டதோடு, மோட்டார் சைக்கிளும் கனரக வாகனத்திக்குள் சிக்குண்டு தீ பிடித்தும் எரிந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர் விபத்துக்களும் இறப்புகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 9 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்