பளையில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு
By Sathangani
கிளிநொச்சி, பளை இத்தாவில் பகுதியில் இன்று காலை (15) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த உந்துருளி மீது அதே திசையில் பயணித்த சிற்றுந்து மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் உந்துருளியில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்
காவல்துறையினர் விசாரணை

விபத்தில் உயிரிழந்தவர் முல்லைத்தீவு, முள்ளியவளைப் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய எம்பெருமாள் குமரவேல் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி