மட்டக்களப்பில் விபத்து : சிறுவர்கள் இருவர் படுகாயம்
மட்டக்களப்பில் (Batticaloa) விபத்தில் சிக்கி 14 வயதான சிறுவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (10) மட்டக்களப்பு மாவட்டம் கலுவாஞ்சொடி காவல் பிரிப்புக்குட்பட்ட செட்டிபாளையம் பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பலவான் குடி பக்கம் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த கார் ஒன்று செட்டிபாளையம் பிரதான வீதியில் வைத்து துவிச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த 14 வயதான இரு சிறுவர்கள் காயமடைந்ததுடன் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் சிறுவர்கள் இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்விபத்தில் காரின் முன் பகுதி சேதமடைந்துள்ளதுடன் துவிச்சக்கர வண்டியும் பலத்த சேதமடைந்துள்ளது.
இந்தநிலையில், ஸ்திதலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி காவல்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 3 நாட்கள் முன்