சம்மாந்துறை - கல்முனை பிரதான வீதியில் விபத்து...! (படங்கள்)
Sri Lanka Police
Accident
Kalmunai
By Vanan
சம்மாந்துறை - கல்முனை பிரதான வீதியில் இன்று (21) காலை விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கதிர்காமத்தில் இருந்து சம்மாந்துறை ஊடாக மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த விபத்தில் சாரதி உட்பட 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



