தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து : 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ( Southern Expressway) பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளதுடன் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையிர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (11.12.2024) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 100 L மற்றும் 100.1 L இடையே கொட்டாவையில் இருந்து பாலட்டுவ நோக்கிச் சென்ற கார் ஒன்று, சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கத்தால் அதே திசையில் பயணித்த லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சேர்’ பைத்தியம் பிடித்து அலையும் வைத்திய அதிகாரியும், மக்கள் பிரதிநிதியும்! யாழில் உலாவரும் அதிகார போதை!
மேலதிக விசாரணை
விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரு மகள்கள் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களை கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் படுகாயமடைந்த மகள் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மாத்தறை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 10 வயது சிறுமியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்தறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |