யாழில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு!
Jaffna
By pavan
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் குளியலறை தண்ணீர் வாளிக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
ஊர்காவற்துறை நாராந்தனை வடக்கை சேர்ந்த சபீசன் கென்சியால் எனும் ஒன்றரை வயது பெண்குழந்தையே உயிரிழந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் வீட்டில் வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை , விளையாடிக்கொண்டு இருந்துள்ளது.
மேலதிக சிகிச்சை
திடீரென குழந்தையை காணதமையால், பெற்றோர் தேடிய வேளை , குழந்தை குளியலறை தண்ணீர் வாளிக்குள் விழுந்த நிலையில் கண்டுள்ளனர்.
உடனே குழந்தையை மீட்டு , ஊர்காவற்துறை வைத்திய சாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு குழந்தை அனுப்பப்பட்டது.
போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (6)செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 10 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்