மதுரோ கைது விவகாரத்தில் அம்பலமான புடினின் இராணுவ பலவீனம்...!
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட போது ரஷ்யா காட்டிய செயலற்ற தன்மை அந்த நாட்டின் உலகளாவிய இராணுவ அதிகாரம் வீழ்ச்சியடைந்துள்ளதை அப்பட்டமாக்கியுள்ளது.
ஒரு வல்லரசு நாடு தனது மிக நெருங்கிய கூட்டாளிக்கு ஆபத்து ஏற்படும் போது, எந்தவிதமான இராணுவ எதிர்வினையையும் ஆற்ற முடியாமல் போனது சர்வதேச அரங்கில் ரஷ்யாவின் பிம்பத்தை சிதைத்துள்ளது.
தன்னை ஒரு உலகளாவிய இராணுவ வல்லரசாக அடையாளப்படுத்திக் கொள்ளும் ரஷ்யா, தனது எல்லைக்கு அப்பால் உள்ள நேச நாடுகளைப் பாதுகாக்கும் திறனை இழந்துவிட்டதை இந்தச் சம்பவம் காட்டுகின்றது.
சிறிய நாடுகள் கூட அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் தைரியத்தைக் கொண்டுள்ள நிலையில், ரஷ்யா போன்ற ஒரு அணுசக்தி நாடு எவ்வித இராணுவ நகர்வுகளையும் மேற்கொள்ளாமல் மௌனம் காப்பது அதன் இயலாமையையே வெளிப்படுத்துகின்றது.
அமெரிக்காவின் உயர் தொழில்நுட்ப இராணுவ நடவடிக்கைகள் மற்றும் வான்வழித் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தவோ அல்லது சவால் விடவோ ரஷ்யாவால் முடியவில்லை.
இது ரஷ்யாவின் பாதுகாப்புத் தளவாடங்கள் மற்றும் அதன் உலகளாவிய பாதுகாப்பு உத்தரவாதத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தனது செல்வாக்கு மண்டலங்களுக்கு அப்பால் இராணுவ ரீதியாகச் செயல்பட முடியாத ஒரு பலவீனமான நிலையிலேயே இன்று ரஷ்யா காணப்படுகின்றது.
வல்லரசுகள் தங்களின் நட்பு நாடுகளுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறும்போது, அவை சர்வதேச அரசியலில் தங்களின் ஆதிக்கத்தை இழக்கின்றன.
மதுரோவின் விவகாரத்தில் ரஷ்யாவின் இந்த பலவீனமான நிலைப்பாடு, இனி வரும் காலங்களில் சிறிய நாடுகள் ரஷ்யாவை ஒரு பாதுகாப்பு சக்தியாக நம்புவதைக் குறைக்கும் என்பதுடன் அமெரிக்காவின் ஒருமுனை ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறு ரஷ்யாவின் பலவீனத்திற்கு வழிவகுத்துள்ள காரணம், அமெரிக்காவின் அடுத்த கட்ட நகர்வு மற்றும் தற்போதைய சர்வதேச அரசியல் களம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |