தரம் 6 பாடத்திட்டத்திலிருந்து சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம் : பிரதமர் அறிவிப்பு
தரம் 6 ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகம் (NIE) ஒப்புதல் அளித்துள்ளதாக கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்தார்.
இதற்கான அனுமதியை தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு அனுமதி நேற்று (06) வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் இன்று (07) எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
மாணவர்களின் பாதுகாப்பு
கல்வித் தரத்தைப் பாதுகாக்கவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசாங்கம் இந்த மறுசீரமைப்புப் பணியை முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம் கல்வி முறையில் காணப்பட்ட ஒரு பெரிய குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை தரம் 6 ஆங்கில பாடத்திட்டத்தில் சர்ச்சைக்குரிய விடயங்களை வெளியிட்டுள்ளதால் பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 14 மணி நேரம் முன்