கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு : தக்சி உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு
பாதாள உலகக்குழுத் தலைவன் எனக் கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி என்பவருக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை மற்றும் தங்குமிட வசதி வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நந்தகுமார் தக்சி உள்ளிட்ட இருவருக்கு இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த இரு சந்தேகநபர்களையும் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விளக்கமறியலில் வைக்க உத்தரவு
90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த இரண்டு சந்தேகநபர்களையும், இன்று (07) கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் (CCD) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் முன்னிலைப்படுத்தினர்.

இதனையடுத்து, சந்தேகநபர்களை ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கும் நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 8 மணி நேரம் முன்